நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணி தீவிரம்

By எஸ்.முஹம்மது ராஃபி

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நூறாண்டு பழமையான பாம் பன் ரயில் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுந்ததால் பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டும் முடிவை மேற்கொண்டு 2018-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச்சில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 11.8.2019 அன்று பூமி பூஜையுடன் கட்டுமானப்பணிகள் தொடங்கின. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை இயந்திரங்கள், பாறை துளைப்பான் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.279.9 கோடி. பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது.

கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது.

ரயில்வே நிர்வாகம் 31.09.21-க்குள் பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால் பருவமழை, இயற்கை சீற்றத்தால் பாலப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மிதவைகள், கிரேன்கள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து தற்போ தைய ரயில் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வப்போது பணிகள் நிறுத் தப்பட்டன. இதனால் குறித்த இலக் குக்குள் பணிகள் முடியவில்லை.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில், பாம்பன் கடலில் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக கடந்த மே மாதம் 101 தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்தன.

கடந்த ஜனவரி மாதம் கர்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டு, 99 கர்டர்களில் 65 கர்டர் கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியப் பகுதியில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக 2 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வரு கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE