சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மழைக் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஒரே நேரத்தில் 1060 கி. மீ நீளத்திற்கு வடிகால்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவது. ஆனாலும் சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மழைநீர் வடிகால்கள் பணிகளின் நிலை குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
» காரப்பட்டு - கதவணிபுதூர் சாலை பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
» மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது கண்டனத்துக்குரியது: ராமதாஸ்
இதன்படி சென்ட்ரல், பெரியமேடு, புளியந்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என.நேரு கூறுகையில், "மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் துரிதமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளை காலதாமதமாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் ஒப்பந்ததாரர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
பல இடங்களில் 60% மேல் வடிகால்கள் பணிகள் நிறைவடைந்து உள்ளன. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் விளைவுகளை சந்திக்க நேரிடும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago