கள்ளக்குறிச்சி | பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஜாமீனில் விடுவிக்க, மாணவியின் தாய் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு ஆக.10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸார் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் 5 பேரும் ஜாமீன் கோரி ஜூலை 29-ல் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் தாய், ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சியங்களை கலைக்கக் கூடும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்