போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று அதிகாலை 2 மணி நேரம் நடத்திய போராட்டம் காரணமாக மதுரை, சென்னையில் அதிகாலையில் பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து தொழி லாளர்களுக்கு பண்டிகை முன் பணத்தை இன்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவ ளியை முன்னிட்டு ஒரு மாதத்துக்கு முன்பு பண்டிகை முன்பணமும், தீபாவளிக்கு முதல் நாள் அரை கிலோ இனிப்பும் வழங்கப்படுவது வழக்கம். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதால் தீபாவளி முன் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த போக்குவரத்துக் கழகத் தொழிலா ளர்கள் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை, சென்னையில் அனைத்து போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் முன் பாக நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் செய்தனர். இதில் தொமுச, சிஐடியூசி, பணியாளர் சம்மேளனம், ஏஐடியூசி, ஐஎன்டி யுசி, எல்எல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இப்போராட்டம் மதுரையில் 14 பணிமனைகள் முன்பு நடை பெற்றது. இதனால் அதிகாலை 4 முதல் 6 மணி வரை பஸ் கள் இயக்கப்படவில்லை. பேருந் துக்காகக் காத்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அரசு போக்கு வரத்துக் கழகத் தலைவர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோ சனை நடத்தினர். அப்போது போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான செலவை அந்தந்தக் கோட்டங்களே ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக முன்பணம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள் ளனர். இப்பணம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் இன்று சேர்க்கப்படும். இனிப்பு வழங்குவது தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago