மாமல்லபுரத்தில் தேசிய அலைசறுக்குப் போட்டி

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 2 நாட்களாக நடைபெற்றும் வரும் தேசிய அளவிலான அலைசறுக்குப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

அலைசறுக்கு கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான அலைசறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவர். கரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இப்போட்டி நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு அலைசறுக்குப் போட்டி 2 நாட்களாக நடைபெற உள்ளது. இதில், முதல் நாளான நேற்று நடைபெற்ற போட்டியில் கர்நாடக, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இன்று (2-ம் தேதி) நடைபெற உள்ள போட்டியில் உள்ளூர் மற்றும் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மாமல்லபுரம் மற்றும் கோவளம் பகுதியில் கடலில் அலைகள் அதிக வேகத்துடன் இருப்பதால் இப்பகுதிகளில் அலைசறுக்குப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவளம் பகுதியில் விரைவில் சர்வதேச அளவிலான அலைசறுக்கு போட்டி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்