7 மாதங்களில் 3 கோடி பயணங்கள்: புதிய சாதனையை நோக்கி சென்னை மெட்ரோ

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை மெட்ரோவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன்படி மொத்தம் சென்னை மெட்ரோ ரயில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3,01,15,886 பேர் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 27,269 பயணங்கள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் மேற்கொண்ட பயணங்கள் 16,11,440 பேர் க்யூஆர் கோடு மூலமும், 32,81,792 பேர் பயண அட்டை மூலம் பயணம் செய்துள்ளனர்.

குறிப்பாக, 2 ஆண்டுகளுக்கு பிறகுப் சென்னை மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில்லி 3.13 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. ஆதாவது, 7 மாதங்களிலேயே இந்த அளவு பயணங்கள் மேற்கொள்ளப்படுள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதியில் பயணிங்களின் புதிய சாதனையை சென்னை மெட்ரோ ரயில் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்