வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்ப்பு முதல் ஆதார் இணைப்பு வரை - முழு விவரம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் அதிக வாய்ப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு உள்ளட்டவை தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு
- வாக்காளர் பட்டியலில் அதிக வாய்ப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது.
- பதிவு செய்வதற்கு வருடத்திற்கு நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும் (ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1)
- இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்
- 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் வசதி
- 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
- 2023ம் ஆண்டின் ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்.
ஆதார் இணைப்பு
- வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தன்னார்வ அடிப்படையில் ஆதார் எண் சேகரிப்பு
- ஆதார் இணைப்பு பணியை 1.8.2022 அன்று தொடங்கி 1.04.2023க்கு முன் நிறைவு செய்யப்படும்.
வாக்காளர் பட்டியல் சுருக்க திருக்கம்
- வாக்காளர் பட்டியலை மேம்படுத்துதல் - 4.8.2022 முதல் 24.10.2022 வரை
- துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவுப் பட்டியல் தயாரித்தல் - 25.10.2022 முதல் 07.11.2022 வரை
- ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.11.2022 வரை
- ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலம் - 9.11.2022 முதல் 8.12.2022 வரை
- சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் - உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்
- ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை பரிசீலனை நிறைவு - 26.12.2022
- இறுதி வெளியீட்டிற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் - 3.1.2023
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 05.01.2023