சென்னை: “உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் திமுக அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் இரண்டாவது ஆண்டாக விவசாயிகள் தவிப்பதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் திமுக அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன?
நாளொரு வேஷம் போட்டு, வெற்று விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்தும் திமுகவினருக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது ஏன்? உடனடியாக முதல்வர் ஸ்டாலின், விவசாயப் பயிர்க் காப்பீட்டு பிரச்னை குறித்து மத்திய அரசோடு பேசி, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago