காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் | தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ''பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 67 கிலோ ஆடவர் பளுதூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கி தங்கம் வென்ற இந்திய வீரர் ஜெரமி லால்ரினுங்காவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பளுதூக்கும் பிரிவில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம். மற்ற போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்து 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் முன்னேறுவதற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்