சென்னை: "பளுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. பளுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர்.
தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி, சங்கேத் சர்கர் மற்றும் வெண்கலம் வென்ற குருராஜா ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
அடுத்தபடியாக 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago