சென்னை: போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பிற மாநிலங்களில் இல்லாத போதை பொருட்கள் தமிழகத்தில் விற்பனையாகிறது. போதை பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். இது முதல்கட்ட போராட்டம்தான். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமடையும்.
தமிழகத்தில் 10 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 9 சதவீதமாக இருந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப்பொருளுக்கு முடிவு கட்டிவிடுவேன்.
தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80 ஆயிரம் கிலோ கஞ்சா விற்பனையாவதாக தகவல் கிடைத்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு பணியில் கூடுதல் காவலர்களை நியமிக்கவேண்டும். போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களைக் கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “இந்தியாவில் அதிக போதைப்பொருள் விற்பனையாகும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டால், அவர்கள் வெளியில் வந்து மீண்டும் அவற்றை விற்பனை செய்கின்றனர்.
எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடையைக்கூட மூடவில்லை. மது ஒழிப்பு தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago