சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
» புதுச்சேரி தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகையை அகற்ற கோரி போராட்டம்: 60 பேர் கைது
» தமிழகத்தின் 534 கிராமங்களில் 4ஜி சேவை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
இந்நிலையில், அதிமுக சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago