சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 30-ம் தேதி (இன்று)நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
31-ம் தேதி (நாளை) சேலம்,நாமக்கல், திருச்சி, பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர்,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர, திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள்,காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆக.1-ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
2-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளுர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
29-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் தேக்கடியில் 9 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 6 செமீ, நீலகிரி மாவட்டம் கெட்டி, குன்னூர், அழகரை எஸ்டேட், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேக்கடியில் 9 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் 6 செமீ மழை பெய்துள்ளது,
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago