திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றின் குறுக்கே விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல்: 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என ஆட்சியர் உறுதி

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்றின் குறுக்கே விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 60 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் ஒன்றுஉள்ளது. இதனை ‘மைனர் பாலம்’என்று தேசிய நெடுஞ் சாலைத்துறையினர் அழைக்கின்றனர். இங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் ஆத்தூர் சுங்கச்சாவடி உள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பழமையான மேம்பாலத்தில் மிகப் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேம்பாலத்தை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வாகனங்கள் செல்லும்போது பாலத்தின் குறிப்பிட்ட இணைப்புப் பகுதி சற்று மேலும் கீழும் இறங்குகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயம் நீடிக்கிறது.

வாகனங்கள் செல்லும்போது இவ்வாறு பாலம் உள்வாங்கி, மேலெழும் பும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் கடந்த இரு நாட்களாக பரவின. இதைத் தொடர்ந்து ஓங்கூர் மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் கடந்த 27-ம்தேதி மாலை முதல் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஒருவழிப் பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலங்களின் தரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் (‘நகாய்') அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதில் அலட்சியம் காட்டியதாகக்கூறப்படுகிறது. இதுகுறித்து டாரஸ் லாரி டிரைவர்கள் அருகேஉள்ள சுங்கச்சாவடியில் புகார் தெரித்துள்ளனர். ஆனால் இப்புகாரை ‘நகாய்' அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களிடம் கேட்ட போது, “பாலத்தின் அடியில் ரப்பர் பேரிங் பேட் வைப்பது வழக்கம். இதை வைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்வுகள் தெரியாது. இந்த பேரிங் பேட் பழுதடைந்ததால் அதிர்வுகள் தெரிய தொடங்கியது.

இதை சீர மைப்பது குறித்து 15 நாட்களுக்கு முன்பே ஆய்வுசெய்தோம். நாங்கள் ஆய்வு செய்ததை அறிந்தே, இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ள னர். பாலம் சேதமடையவில்லை; நன்றாகவே உள்ளது. பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது அவ்வளவே. பாலம் இடிந்து விழும் என்றே பேச்சுக்கே இடமில்லை” என்றனர்.

இதற்கிடையே நேற்று காலை விழுப்புரம் ஆட்சியர் மோகன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவிப் பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஸ்பிரிங், தகடு விலகி உள்ளது

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மோகன், “பொதுவாக ஒவ்வொரு பாலத்திலும் உள்ள தூணுக்கும் இடையில் இணைப்புக்காக ஸ்பிரிங் மற்றும் தகடு பொருத் தப்படும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஸ்பிரிங் தகடு மாற்றி சரிசெய்யப்படும்.

தற்போது எதிர்பாராதவிதமாக ஸ்பிரிங் மற்றும் தகடு விலகிஉள்ளது. பழுதடைந்த மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் இன்று (நேற்று) முதல் தொடங் கப்பட்டுள்ளது. 10 முதல் 15 நாட் களுக்குள் மேம்பாலம் சீரமைக்கப் பட்டுவிடும். அதன் உறுதி தன்மை சரிபார்த்த பிறகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்