டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? - விளக்கம் கோரும் தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ''காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அப்பகுதியில் விவசாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இதிலும் பழனிசாமி அரசைப் போலவே ஸ்டாலின் அரசும் தமிழகத்தை வஞ்சிக்க நினைக்க கூடாது'' என்று தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்