சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி செல்லும் 1 கி.மீட்டர் தூரத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் 22,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி படேல் சாலை, சின்னமலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் வரவேற்பு: மேளங்கள் முழங்க பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். விழா அழைப்பிதழில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் பெயருக்கு மேல் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றது. இதனால், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். எனவே இந்த முறை எல்.முருகன், பொன்முடி ஆகியோர் பெயரை சரிசமமாக போட்டு, பல்கலைக் கழகம் தரப்பில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago