சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ள உயர் நீதிமன்றம், இத்தொகையை 2 வாரங்களுக்குள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தர விட்டுள்ளது.
‘சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், நீண்டகாலமாக வாடகை செலுத்தவில்லை. அந்த குத்தகையை ரத்துசெய்ய அறநிலையத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று பி.சுகுமார் என்பவர்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நீதிபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நடராஜனும், அறநிலையத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்ஆர்ஆர் அருண்நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.
அறநிலையத் துறை உதவி ஆணையர் தாக்கல் செய்தஅறிக்கையில், ‘கோயில் சொத்துகளை குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு:
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிடவில்லை. அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. எனவே, அறநிலையத் துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன்.
அதேபோல அற நிலையத்துறை உதவி ஆணையர், இணை ஆணையருக்கு தலா ரூ.50 ஆயிரம்அபராதம் விதிக்கிறேன். அவர்கள் இத்தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago