சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் உந்து பிரதான குழாயில் மதகுவால்வு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 30, 31 தேதிகளில் ராயபுரம் உள்ளிட்ட 4 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மிமீ விட்டமுள்ள உந்து பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி நாளை (ஜூலை 30) காலை 8 மணி முதல் நாளை மறுநாள் (ஜூலை 31) மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
ராயபுரம் மண்டலம்
இதன் காரணமாக இவ்விருநாட்களில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திரு.வி.க. நகர் மண்டலம்
மேலும், திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி,அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட கெல்லீஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் மற்றும்தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண் 044-45674567-ஐ தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago