மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய எஸ்.ஐ.க்கு மாதத்தின் நட்சத்திர காவல் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: மெச்சக்தக்க வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு மாதத்தின் நட்சத்திர காவலர் விருதை காவல் ஆணையர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டுச் சான்றிதழ்களுடன் வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணி செய்யும் போலீஸாரை கண்டறிந்து அவர்களின் சிறப்பான பணியை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் போலீஸாருக்கு ரூ.5 ஆயிரம் பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன்மாதம் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக சென்னை, மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் மோசடி புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் லோகேஸ்வரனுக்கு “ஜூன் மாதத்தின் நட்சத்திர காவல் விருதை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

லோகேஸ்வரன் போலியான கன்டெய்னர் நிறுவனங்கள் பெயரில் பல கோடி மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.58 லட்சம், 188 பவுன் தங்க நகைகள், 4 லேப்டாப்கள், 3 செல்போன்கள், ஒரு டேப்லெட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய பெரிதும் உதவியாக இருந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்