செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு தெலங்கானா ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்போருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உலக அரங்கில் நமது இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரம்மாண்டமான செஸ் போட்டி நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழ் மண்ணில் நடைபெறுகிறது.

எப்போதுமே விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகமே பெருமைப்படத்தக்க வகையில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியால் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துகிறேன். இந்திய வீரர்களும், தமிழக வீரர்களும் வெற்றி வாகை சூட வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்தியர்கள் திறமையுடன் விளையாடி வெற்றி பெற்று, நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 187 நாடுகளில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்துள்ள வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்: எனக்கு மிகவும் பிடித்த உள்ளரங்கில் விளையாடும் விளையாட்டு செஸ். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்