ராம்குமார் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவர் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவ நிபுணர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனுவை “மோசமான நடைமுறைக்கு வித்திடும்” என்று கூறி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறும் போது, “நாங்கள் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது. தனிப்பட்ட மருத்துவக்குழு வேண்டுமென்றால் அல்லது மருத்துவக் குழுவில் தனிப்பட்ட நபர் ஒருவர் தேவை என்று கேளுங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், ஆனால் தனியார் மருத்துவர்களை அனுமதிக்கவே முடியாது” என்றார்.

ராம்குமார் தந்தை பரமசிவத்தின் வழக்கறிஞர்களான காமினி ஜெய்ஸ்வால், எஸ்.ரஜினிகாந்த் ஆகியோரிடம் நீதிபதிகள், மருத்துவர்கள் ஒருதலைபட்சமானவர்களாக இருப்பார்கள் என்று பரமசிவம் அஞ்சுகிறாரா இல்லை அவர்கள் நல்ல மருத்துவர்கள் இல்லை என்கிறாரா அல்லது மருத்துவமனை நல்ல மருத்துவமனையல்ல என்று நினைக்கிறாரா? என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த காமினி ஜெய்ஸ்வால், பிரேதப் பரிசோதனை அரசு மருத்துவர்களால் செய்யப்படுகிறது, அவர்கள் மாநில அரசின் கீழ் உள்ளவர்கள், இதனால் அவர்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பார்கள். அதாவது ராம்குமார் மின் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விசாரணைக் காவலில் மரணம் ஏற்பட்டதா என்ற உண்மை தெரியாமலே போய் விடும், என்றார்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் கூறும்போது, இதற்காகத்தான் உயர் நீதிமன்றம் ஒரு கூடுதல் மருத்துவரையும் சேர்க்க பரிந்துரை செய்தது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரும் பிரேதப் பரிசோதனையின் போது இருப்பார் என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் அனுமதி அளித்தது என்றனர்.

இதற்கு எதிராக வாதாடிய காமினி ஜெய்ஸ்வால், சில பரபரப்பு வழக்குகளில் எய்ம்ஸ் மருத்துவர்களே கூட தங்கள் மீது சிலர் செல்வாக்கு செலுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நாங்கள் அத்தகைய சூழ்நிலையை விரும்பவில்லை, எனவே எங்கள் தெரிவில் ஒரு மருத்துவரை நியமிக்கக் கோருகிறோம் என்றார்.

இதற்கு நீதிபதிகள், “நீங்கள் கூறும் அந்த ஒரு மருத்துவர் என்ன செய்வார்? 5 மருத்துவர்களுடன் இவர் ஒருவர் இருக்கிறார் அவ்வளவே. தனியார் மருத்துவர்களை இதில் அனுமதிப்பது மோசமான நடைமுறையாகும்” என்று கூறி பரமசிவம் மனுவை நிராகரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்