தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த கடலோரப் பாது காப்பு ஒத்திகை நேற்று முடிந்தது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அனைத்து சவால்களையும் எதிர் கொள்ள தமிழக காவல்துறை தயார் நிலையில் இருப்பதாக கூடுதல் டிஜிபி திரிபாதி கூறினார்.
கடந்த 1993-ல் தொடங்கி டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் உட்பட பல இடங்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஏராளமானோர் பலியாயினர். இந் நிலையில், 2008 நவம்பரில் கடல் வழியாக இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள், மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். 160-க்கும் மேற்பட்டோர் பலியாயி னர். இதையடுத்து, நாடு முழுவதும் கடல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் 6 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் வேடத்தில்..
தீவிரவாதிகள் வேடத்தில் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் போலீஸார் தமிழக கடல் எல்லை வழியாக தரை பகுதிக்கு ஊடுருவுவார்கள். பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார், கடற் படையினர், கடலோர காவல் படையினர், கடலோர காவல் குழு வினர் அவர்களை கண்டுபிடித்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகை. இதுவரை 16 முறை இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை ‘சாகர் கவச்’ (கடல் கவசம்) என்று பெயரில் நடத்தப்பட்டுள்ள 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்று முடிவடைந்தது.
இதுகுறித்து தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதி கூறும்போது, ‘‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அனைத்து சவால் களையும் எதிர்கொள்ள தமிழக காவல்துறை தயார் நிலையில் உள்ளது. எப்போதும்போல, தமி ழகம் முழு பாதுகாப்பு நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது’’ என்றார்.
முக்கியத்துவம் பெற்ற ஒத்திகை
சமீபத்தில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா நேற்று பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதி மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப் பட்டதாக ராணுவம் தெரிவித் துள்ளது .
இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இறந்ததாக கூறியுள்ள அந்நாட்டு அரசு, இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளதால், எல்லைப் பகுதி மற்றும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாதுகாப்பு ஒத்திகை நடந்து முடிந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago