செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்!

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார். நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா மேடை மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் மின்னும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டுளளது.

இந்த மேடையில் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது. 186 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களின் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு வந்தனர்.

“ஒருவன் ஒருவன் முதலாளி” உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களின் இசை பின்னணியில் ஒலிக்க அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடுகளின் பெயர் பலகை அடங்கிய பதாகைகளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 186 அரசுப் பள்ளி மாணவர்கள் ஏந்தி அணிவகுப்பு வந்தனர்.

இதில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரலை இங்கே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE