வாக்குறுதிகளை மறந்த திமுக அரசு: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதிகளை திமுகமறந்து விட்டதாக சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், கழிவுநீர் வரி உயர்வு, சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஆகியவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகில்நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் ஏராளம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது திமுக.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும் என்று கூறிய திமுக, தற்போது அதை மறந்துவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அதேபோல, கரோனா பரவலால்ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு சீராகும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு, அவற்றை மறந்த கட்சி திமுக அதேபோல, கட்டுமானப் பொருட்கள் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து, ஆட்சிக்குவந்த பிறகு விலையைக் குறைக்கஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குறுதி அளித்தபடி நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை. பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கவில்லை.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். இவ்வாறு மாணவர்கள், பெண்கள், முதியோர், அரசு ஊழியர்கள் ஆகியோரை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கிளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. போதைப் பொருட்கள்நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கைப்பாதுகாக்காமல், புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, கோயிலாக கருதும் கட்சி அலுவலகத்தை காலால் உதைத்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். துரோகிகளை விரட்டி அடிப்போம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கே.பி.அன்பழகன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகை ரவி, தி.நகர் சத்யா, ஆதி ராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

5 பேருக்கு மயக்கம்: பழனிசாமி தடுமாற்றம்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 9 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆர்ப்பாட்டம் சுமார் 10.50 மணியளவில் தொடங்கியது.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார். தொண்டர்கள் வெகுநேரமாக வெயிலில் நிற்பதால், இதர நிர்வாகிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.

பழனிசாமி காலை 11.08 மணிக்கு உரையைத் தொடங்கினார். அப்போது, முன்னாள் எம்.பி. விஜயகுமார் மற்றும் தொண்டர்கள் 3 பேர், முன்னாள் அமைச்சர் ஒருவரின் காவல் துறை பாதுகாவலர் ஆகிய 5 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கூட்டத்தின் இறுதியில் பழனிசாமி பேசுவதற்கு சிரமப்பட்டார். மேலும், அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. உடனே, அருகில் உள்ள இருக்கையில் அமரவைக்கப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் குடிநீர் கொடுத்தனர். பின்னர், அவர் ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்