ஆளுநர் மாளிகையில் இன்று இரவு ஓய்வெடுக்கிறார் பிரதமர் மோடி: பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாசென்னையில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும்பிரதமர், இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையில் இரவு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டமூத்த நிர்வாகிகளை பிரதமர் தனித்தனியே சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் சந்திக்க வேண்டிய முக்கிய நபர்கள் பட்டியல் இருப்பதாகவும், நேரத்தைப்பொறுத்து சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

அதேபோல, தற்போது ஒற்றைத் தலைமை சர்ச்சையால்இரு அணிகளாக அதிமுகவில் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரும் தனித்தனியாக சந்திக்கத் திட்டமிட்டு, அதற்காக நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் நேரம் அளிக்கும்பட்சத்தில் இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, மாநிலத்தின் சில முக்கியப் பிரமுகர்களையும் பிரதமர் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42-வது பட்டமளிபபு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மீண்டும் அகமதாபாத் புறப்பட்டுச் செல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்