சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு; காவல்துறை விசாரணையில் குறைபாடு: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கானூங்கோ கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அப்பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. மாணவி உயிரிழப்புத் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 23-ம் தேதி மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் சின்னசேலத்தில் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ‘சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் மாணவியர் விடுதிக்கு அனுமதியே பெறவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் உயிரிழப்புக் குறித்து விசாரணை நடத்தினர்.

இக்குழுவினர் நேற்று காலை கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உள்ள மாணவியின் பெற்றோரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நிகழ்ந்த பள்ளி விடுதிக் கட்டிடத்திலும் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கானூங்கோ, “உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து விசாரணை நடத்தியப் பின் பள்ளியிலும், விடுதியிலும் ஆய்வு செய்தோம். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுள்ளோம். இச்சம்பவத்தில் முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினோம்.

பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்படை வசதி குறைபாடுகளும் உள்ளதை குறிப்பெடுத்துள்ளோம்.

மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவு இருப்பதும் எங்களது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம்.

இது தொடர்பான அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்