டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையான அதிகாரி: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மதுரை, திருச்சியில் 1.2.2019 முதல் 30.6.2019 வரை போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை பெரியளவில் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 3 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், போலி பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக 41 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் பாஸ்போர்ட் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஒருவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை.

தமிழக அரசு அப்போதைய மதுரை நுண்ணறிவு பிரிவு ஏசிபி சிவகுமார், 1 காவல் ஆய்வாளர், 3 தலைமை காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது இந்த வழக்கு தீவிரமானது. மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 54 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்துள்ளார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் 2021-ல் பொது நல வழக்கு தொடர்வதற்கு முன்பாகவோ, உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாகவோ, முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தாமதம் இல்லாமல் அனுமதி வழங்கியிருந்தாலோ இப்பிரச்சினை எழுந்திருக்காது.

இருவருக்கும் பாராட்டு

ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என நான் சான்றளிக்கிறேன். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லையென்றால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 secs ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்