சேலம் மேயர் வேட்பாளர்: திமுக-வில் சூடாமணி, கலையமுதனுக்கு வாய்ப்பு

By எஸ்.விஜயகுமார்

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் முன்னாள் மேயர் சூடாமணி, மற்றும் கடந்த தேர்தலில் மேயர் வேட்பாளராக களம் இறங்கிய கலையமுதன் ஆகியோரில் ஒருவரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது என திமுக-வினர் கூறிவருகின்றனர்.

சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடப்போகும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் மேயர் சூடாமணி, கடந்த தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கலையமுதன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1986-91 வரை சேலம் நகராட்சி தலைவராக இருந்தவர் சூடாமணி. இவர்தான் சேலம் நகராட்சியின் கடைசி தலைவர். 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக சேலம் தரம் உயர்த்தப்பட்டது. இதை யடுத்து 1996-ல் நடைபெற்ற மாநக ராட்சி தேர்தலில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சூடாமணி சேலத்தின் முதல் மேயராக பதவி வகித்தார்.

எனினும், 2001-ல் நடைபெற்ற தேர்தலின்போது, திமுக கூட்டணி யில் இடம் பெற்ற பாமக-வுக்கு சேலம் மேயர் பதவி ஒதுக்கப் பட்டதால், தேர்தலில் போட்டி யிடும் வாய்ப்பு சூடாமணிக்கு கிடைக்காமல் போனது.

2006-ல் நடை பெற்ற தேர்தலின் போது, சுழற்சி அடிப்படையில் மேயர் பதவிக்கு எஸ்சி- பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, அப்போதும் சூடாமணிக்கு வாய்ப்பு இல் லாமல் போனது. அந்த தேர்தலில் திமுக சார்பில் ரேகா பிரியதர்ஷினி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது, மேயர் பதவி பொது என அறிவிக்கப்பட்டாலும் மேயர் பதவிக்கு திமுக சார்பில் எஸ்டி கலையமுதன் அறிவிக்கப் பட்டதால், மீண்டும் சூடாமணிக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில், தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள சூடாமணிக்கு தற்போது சேலம் மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 43-வது வார்டில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட கலையமுதனுக்கும் தற்போது 51-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இருந்தே திமுக-வில் இருந்து வரும் கலையமுதன், 1996-ம் ஆண்டு சேலம் மாநகராட்சியில் சூரம்பட்டி மண்டலக்குழு தலைவராகவும், 2001-ல் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள கலையமுதன் தற்போது திமுக சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார்.

சேலம் மாவட்ட திமுக-வில் கலையமுதன், சூடாமணி இருவருமே மூத்த உறுப்பினர்கள் என்பதால், இருவருக்குமே மேயர் பதவிக்கான வாய்ப்பு சமநிலையில் உள்ளதாக திமுக-வினர் தெரிவிக் கின்றனர். இம்முறை நேரடி மேயர் தேர்தல் இல்லை என்பதால், கவுன்சிலராக வெற்றி பெறுபவரைத் தான் மேயர் பதவிக்கு நிறுத்த முடியும்.

எனவே, மேயர் பதவிக்கு தகுதியான இருவரை கட்சி மேலிடம் நிறுத்தியிருப்பதாக திமுக-வினர் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆளுங் கட்சியாக உள்ள அதிமுக-வுக்கு கடுமையான போட்டியைக் கொடுக் கும் வகையில் திமுக-சார்பில் முன்னாள் மேயர், முன்னாள் மேயர் வேட்பாளர் என 2 பேர் கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, சேலம் மாநகராட்சி தேர்த லில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்