ஏலக்கி வாழைப்பழத்தின் விலை இரு மடங்கு உயர்வு: கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

By எஸ்.கே.ரமேஷ்

ஏலக்கி வாழைப்பழத்தின் விலை இரு மடங்கு உயர்ந் துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், காவேரிப்பட்டணம், தளி,பாகலூர், மல்ல சந்திரம், நா.கொண்டப்பள்ளி, உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் விரும்பும் வாழை

வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் இப்பகுதியில் ரொபஸ்ட்டா, ஏலக்கி, ஜி 9, செவ்வாழை ஆகிய ரகங்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், ஏலக்கி பழம் அரேபிய நாடுகள், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், பெங்களூரு, ஹைதராபாத், மைசூரு உள்ளிட்ட பெருநகரங் களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தற்போது, பெங்களூரு மற்றும் தமிழக சந்தைகளுக்கு இங்கிருந்து வாழைப்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக வாழைப்பழத்தின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏலக்கி வாழைப்பழத்தின் விலை இரு மடங்கு உயர்ந் துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

ஆடிப்பட்டத்தில் அதிகம்

இதுதொடர்பாக விவசாயி கள் கூறியதாவது:

ஆடி மற்றும் தை பட்டத்தில் வாழை சாகுபடி மேற்கொள்வோம். தை பட்டத்தை விட ஆடிப்பட்டத்தில் வாழை சாகுபடி பரப்பு அதிகமாக இருக்கும். ஒரு ஏக்கர் சாகுபடியில் 1,200 வாழைத்தார் வீதம் 50 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். தை பட்டத்தில் வாழை சாகுபடி பரப்பளவு குறைவாக இருப்பதால், சந்தையில் வாழைப்பழத்தின் விலை உயரும். கடந்த மாதம் ஒரு கிலோ ஏலக்கி ரூ.40-க்கு விற்பனையானது.

தற்போது, ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதேபோல, மற்ற ரக வாழைப் பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது, நடவு செய்யப்பட்ட வாழைகளில் அடுத்த மாதம் அதிகளவில் மகசூல் கிடைக்கும். இதனால், பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தற்போது, ஆடி மாதம் கிராமங்களில் மாரியம்மன், முருகன் கோயில்களில் திருவிழா அதிகம் நடைபெறுவதால், வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், வாழைப்பழத்தின் விலை உயர்வு விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்