கிண்டி சிறுவர் பூங்காவை மேம்படுத்த ரூ.20 கோடி

By செய்திப்பிரிவு

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவை மேம்படுத்த தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு வனம், வன உயிரினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கிண்டிசிறுவர் பூங்காவை ரூ.20 கோடியில்மேம்படுத்தி சிறுவர் இயற்கை பூங்காவாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தஅறிவிப்பை செல்படுத்தும் விதமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள வன உயிரினங்களின் அடைப்பிடங்கள், இயற்கையாக வனங்களில் உள்ளது போன்று உருவாக்கப்பட உள்ளன.

மேலும் சிறுவர்களுக்கான நூலகம்,விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள் மேம்பாடு, பூங்காவுக்கென இணையதளம், பறவைகள் விலங்குகளின் சிறப்பம்சங்கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப்பிடங்களின் அருகில் கியூஆர் கோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE