சரக்கு வாகனப் பதிவு, தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனரக சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 1,500 ரூபாயாகவும், நடுத்தர சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை 1,300 ரூபாயாகவும் உயர்த்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், 2021 அக்டோபரில் அறிவிக்கை வெளியிட்டது.

இதேபோல பதிவுச்சான்றை புதுப்பிக்க தாமதமாகும், ஒவ்வொரு மாதத்துக்கும் 500 ரூபாயும், தகுதிச்சான்று புதுப்பித்தலுக்கான தாமதத்துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் குமாரசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மத்திய அரசின் கட்டண உயர்வு மற்றும் கூடுதல் கட்டண அறிவிப்பு என்பது 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு மட்டும் விதிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது . கடந்த 2016-ம் ஆண்டு இதேபோல கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் பதிவுச்சான்று, தகுதிச் சான்று புதுப்பிக்க ஒரே நடைமுறையை பின்பற்றும் நிலையில் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது.எனவே இந்த அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்