சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழக அரசு சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சில விளம்பர பேனர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பாஜகவினர் ஒட்டினர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கவுள்ளன. இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிக்காக தமிழக அரசு பல்வேறு வகையான விளம்பரங்களை செய்து வருகிறது. இந்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் இடம்பெறவில்லை என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், தமிழக பாஜகவினர் சென்னையில் சில இடங்களில் தமிழக அரசு வைத்துள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில், அந்த பேனர்களின் அளவுக்கேற்ப பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பிரதமரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Loading...
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago