சின்னசேலம் மாணவி இறந்த வழக்கு: கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி சந்தேகத்துக்கிடமாக இறந்த வழக்கில் கைதான, பள்ளி தாளாளர் உட்பட 5 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது.

சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி, கடந்த 13-ம்தேதி மர்மமான முறையில் இறந்தார். அவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17-ந் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தஇளைஞர்கள் நடத்திய போராட்டம் கொந்தளிப்பாக மாறி கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது அந்த பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.

இதற்கிடையே மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

3 நாட்கள் காவல் கோரி மனு

இது தொடர்பாக குறிப்பிட்ட தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு எழுத ஜாமீன்

சின்னசேலம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்களும் அடங்குவர். இவர்களில் இருவர் பிளஸ் 2 மறுதேர்வு எழுத வேண்டி உள்ளதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள இளைஞர் நீதிகுழுமத்தின் முதன்மை நடுவரிடம் கைது செய்யப்பட்ட சிறுவர்தரப்பு வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நடுவர் இருவருக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்