சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.
நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்தபின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோட்டிலிருந்து அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டவரிடம், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர், புதுக்கோட்டை மாவட்ட துணை ஆணையர் ஒருவரை தொடர்புகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அழைப்பு மையத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க காலதாமதமாவது ஏன் என்பது குறித்து கேட்டறிந்தார். அழைப்பு மையத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
» இந்தியாவில் ரியல்மி பேட் X டேப்லெட் மற்றும் வாட்ச் 3 அறிமுகம்: விலை & சிறப்பு அம்சங்கள்
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அலுவலகத்தை முதல்வர் தொடர்பு கொண்டு, அழைப்பு மையத்திற்கு வந்த புகார்களின் மீதான அம்மாவட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago