திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு கொள்கையை 4 வாரங்களில் இறுதிசெய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை தமிழக அரசு 4 வாரங்களில் இறுதிசெய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்ஜிபிடிக்யூஐஏ ப்ளஸ் (தன்பாலின ஈர்ப்பாளர்கள்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் இவர்களை குறிப்பிடுவதற்கான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது.

வல்லுநர்களுடன் ஆலோசனை

அப்போது அரசு தரப்பில், "மூன்றாம்பாலினத்தவர்களின் உரிமைகள், பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகளை வகுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சமுதாயத்தினரை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பிறப்பியல் மற்றும் அகராதி துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதற்கு 4 வாரகால அவகாசம் தேவை.

மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கும் அடுத்தவாரம் முதல் பயிற்சி வழங்கப்படும். அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின்போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, “இந்த சமுதாயத்தினரை குறிப்பிடும் வகையில் அதற்கான சொற்களஞ்சியத்தை 4 வாரங்களில் வெளியிட வேண்டும். அதேபோல திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகளை தமிழக அரசு 4 வாரங்களில் இறுதிசெய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்