மகளிர் உரிமைத் தொகை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மநீம இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த மகளிர் உரிமைத் தொகையானது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர். ஆட்சிக்கு வந்தபின்னர், ''...அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்'' என்றார் நிதியமைச்சர்.

கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதியமைச்சர்.

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விவாதிக்க முதல்வர், நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மக்கள் வலியுறுத்துகிறது.'' இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE