விருத்தாசலம்: சின்னசேலம் பள்ளி மாணவி, ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறிய விதம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவியது. நேற்று (24-5-2022) இந்து தமிழ் திசை நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழிலும் விமர்சனச் செய்திக்குறிப்பும் பிரசுரமானது.
இந்நிலையில், அச்செய்தி குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று அளித்த விளக்கம்:
அண்மையில் நடந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது. மதியின் தாயார் செல்வி, எனது சொந்த கிராமமான கழுதூர் பஞ்சாயத்தை சேர்ந்த அரியநாச்சியில் பிறந்து வளர்ந்தவர்.
இளம் வயதிலிருந்தே என்னை அவருக்குத் தெரியும். எனக்கு அவருடைய குடும்பத்தினரையும் நன்கு தெரியும். அரியநாச்சி கிராமத்தில் இன்றும் ‘கணேசா’ என்று தான் என்னைக் கூப்பிடுவார்கள். அரியநாச்சி கிராம மக்களைப் பொறுத்தவரை நான் அமைச்சர் அல்ல. சாதாரண கணேசன்தான். எனக்கும் அரியநாச்சி கிராம மக்களுக்குமான உறவு என்பது 60 ஆண்டுகால உறவு.
மதி மரணமடைந்த செய்தியை அறிந்து ஆறுதல் கூறுவதற்காக சென்றபோது, செல்வி தன்னுடைய மகளின் இழப்பு குறித்து என்னிடம் கூறி அழுதார். கரோனாவால் என்னுடைய மகளையும், மனைவியையும் இழந்த துயரத்தை நான் அவரிடம் கூறினேன். என் மகளைப் போன்ற செல்வி, இளம்வயது குழந்தைகளை இழப்பது பெற்றோருக்கு எவ்வளவு துயரமானது என்பதைக் கூறி ஆறுதல்படுத்த முயன்றேன்.
எனவே தான் செல்வியை ஒரு மகளாகவும், அவரது மகளை எனது சொந்த பேத்தியாகவும் பாவித்து, மாணவியின் இறுதிச் சடங்கு வரை உடனிருந்து அனைத்தும் முடிந்த பிறகுதான் அங்கிருந்து வெளியேறினேன்.
வேதனை தருகிறது
அப்படி இருக்க, உள்ளார்ந்த சோகத்துடன் நான் ஆறுதல் கூறியது தவறான முறையில் சமூக ஊடகங்களில் சித்தரித்துப் பரப்பப்பட்டுள்ளது. பெரும் துயர சம்பவ நிகழ்வை, கண்ணீரை, கொச்சைப்படுத்தி காட்டுவது சமூக ஊடகங்களுக்கு அறமல்ல. லைக்ஸ் - வியூஸ் பெறுவதற்காக, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், கொச்சையாகவும் சித்தரித்து காட்டலாம் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இப்போக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து விசாரித்த முதல்வர்
ஸ்ரீமதியின் மரண செய்தி அறிந்து தமிழக முதல்வர், எவ்வளவு வேதனை அடைந்தார் என்பதும், அரசு நிர்வாகத்தை எவ்வளவு வேகமாக முடுக்கிவிட்டார் என்பதும், ஸ்ரீமதியின் இறுதி சடங்கு நடந்த நாளில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று எத்தனை முறைபோன் போட்டு விசாரித்தார் என்பதும், 'சிறு தவறு கூட நடக்கக் கூடாது எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்' என்றும் ஓயாமல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார் என்பதும் அமைச்சர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்வது என் கடமை. அதை உங்களின் பத்திரிகையின் வழியாக சொல்வதில் பெருமை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமதியின் தாயார் செல்வி, எனது சொந்த கிராமமான கழுதூர் பஞ்சாயத்தை சேர்ந்த அரியநாச்சியில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலிருந்தே என்னை அவருக்குத் தெரியும். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்கு தெரியும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago