தமிழக பிரச்சினையை பேச எனக்கு முழு உரிமை உண்டு: ஆளுநர் தமிழிசை கருத்து

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஒரு பிரச்சினை என்றால், அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை வந்த அவர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: நான் ஒரு தமிழச்சி. வேறு மாநிலத்துக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால், அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது. முழுவதுமாக நான் இங்கு இருப்பேன் அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். எனது பெயரில் மட்டுமல்ல, எனது உயிரிலும் தமிழ் உள்ளது.

ஆளுநர்களை அரசியல்வாதிகளாக பார்க்கின்றனர். ஆளுநர்கள் அரசியல் செய்வதில்லை. ஆளுநர்கள் ஆட்சி அதிகாரத்தை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், அதை மற்றவர்கள் அரசியலாக்கினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். இதில் எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நிகழ்வை சிலர் அரசியலாக்குகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு, மத்திய அமைச்சர் முருகனை அழைத்ததுதான் சிலருக்கு பிரச்சினை. அவரை அழைத்ததில் தவறில்லை.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரின் பெயர் அழைப்பிதழில் இருந்ததா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பிதழில் பெயர் இருந்தால்கூட, சில நேரங்களில் அவர்கள் வருவது இல்லையே.

ஆளுநர்களுக்கு வேந்தர் என்ற ஒரு பொறுப்பு கொடுத்திருப்பதை அரசியலாக்கி விடக்கூடாது. ஆளுநர்களுக்கு இப்போது உள்ள அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்