சென்னையில் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்: அமைச்சர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணைந்து சிறப்பு ஓட்டத்தை நேற்று சென்னையில் நடத்தியது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்துகாலை 7 மணிக்கு தொடங்கிய இந்தசிறப்பு ஓட்டம் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றது.

இதை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஓட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவ, மாணவியர், சதுரங்க வீரர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும்அரசு அலுவலர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நைஜீரியா நாட்டில் இருந்து வந்த வீரர்கள்,
சென்னை விமானநிலையத்தில் `செஸ் தம்பி' சின்னத்துடன் படமெடுத்துக் கொண்டனர். படம்: எம்.முத்துகணேஷ்

நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் இணைந்து மேற்கொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவ,மாணவிகள், சதுரங்க வீரர்களுக்கு திருப்பூர் கிளாசிக் போலோ பின்னலாடை நிறுவனம் சார்பில் டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்