உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
» உலக தடகள சாம்பியன்ஷிப் | வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா - இந்தியாவின் 19 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago