மதுரை: மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகளில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது. சோதனையின்போது 14 கிலோ தங்கம், ரூ.165 கோடி ரொக்கம், ரூ.150 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ளது ஜெயபாரத் கட்டுமான நிறுவனம். இந்நிறுவனம் மற்றும் இதன் துணை நிறுவனங்களின் பங்குதாரர்களாக அழகர், ஜெயக்குமார், முருகன், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.
மேலும் இதன் சகோதர நிறுவனங்களான கிளாட்வே சிட்டி, கிளாட்வே கிரின் சிட்டி, அன்னை பாரத், ஆகிய பெயர்களில் மதுரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 20-ம் தேதி முதல் வருமானவரித் துறையினர் ஜெயபாரத் குழும நிறுவன பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி வந்தனர். இதில் முருகனின் வீட்டில் ரூ.75 கோடி ரொக்கம், 3 கிலோ 200 கிராம் தங்கம், ரூ.93 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
செந்தில்குமார் என்பவர் வீட்டில் 2 கிலோ 700 கிராம் தங்கம், ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சரவணகுமார் என்பவர் வீட்டில் மூன்றரை கிலோ தங்கம், பணம், வைரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அழகர் என்பவர் வீட்டில் ரூ.90 கோடி ரொக்கம், ரூ.130 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜெயக்குமாரின் கோச்சடை வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ தங்கம், ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் மொத்தம் 14 கிலோ தங்கம், ரூ.165 கோடி ரொக்கம், ரூ.150 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago