தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின்போது ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்து, அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி, 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒரே ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கு 81 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வையும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழகஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும், அனைத்து மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களிலும் நாளை ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் தொழிற்சங்க நிர்வாகிகள், சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் பங்கேற்பார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்