சென்னை: வேளச்சேரி எல்.ஐ.சி கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெருங்குடி கழிவுநீர் நிலையத்துக்கு உந்துகுழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ஜூலை 25-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி காலை 11 மணி வரை எல்ஐசி காலனி கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளச்சேரி எல்.ஐ.சி. காலனி கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 1,000 மி.மீ. விட்டமுள்ள உந்துகுழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்காரணமாக, ஜூலை 25-ம் தேதி காலை 11 மணிமுதல் 26-ம் தேதி காலை 11 மணி வரை எல்.ஐ.சி. காலனி கழிவுநீர் உந்துநிலையம் செயல்படாது.
எனவே, பகுதி-5, பகுதி-9, பகுதி-13, பகுதி-14-க்கு உட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால், அவசரத் தேவைகளுக்காக, கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதிப் பொறியாளர்-5 (ராயபுரம்) கைப்பேசி எண் 8144930905, பகுதிப் பொறியாளர்-9 (தேனாம்பேட்டை ) கைப்பேசி எண் 8144930909, பகுதிப் பொறியாளர்-13 (அடையாறு) கைப்பேசி எண் 8144930913, பகுதிப் பொறியாளர்-14 (பெருங்குடி) கைப்பேசி எண் 8144930914 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
» பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாக அமைச்சர் விளக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago