தேனி மாவட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்பட 4 நகராட்சி தலைவர்களுக்கு சீட் இல்லை, புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி உள்ளது. இதில் பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜா, கம்பம் நகர்மன்ற தலைவர் டி.டி.சிவக்குமார், போடி நகராட்சி தலைவர் பழனிராஜ், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் முருகேசன், சின்னமனூர் நகராட்சி தலைவர் சுரேஷ், கூடலூர் நகராட்சி தலைவர் அருண்குமார் ஆகியோர் உள்ளனர். இதில் பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நகராட்சி தலைவர் பதவி தற்போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 நகராட்சிகள் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வெளியி டப்பட்ட அதிமுக நகராட்சி கவுன் சிலர் வேட்பாளர் பட்டியலில் சின்னமனூர் நகராட்சி தலைவரும், சின்னமனூர் நகர செயலாளருமான சுரேஷ், கூடலூர் நகராட்சி தலைவர் அருண்குமார் தவிர நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், பழனிராஜ், தேனி நகர செயலாளர் முருகேசன் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதற்கிடையில் புதிய முகங் களுக்கு வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு?
மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் வேட்பாளர்கள் 10 பேர் மாவட்ட செயலாளரும், ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏயுமான தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் என புகார் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் நகராட்சி கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் 4 நகராட்சி தலைவர்களுக்கு சீட் அளிக்கப்படவில்லை, மேலும் வாய்ப்பு அளிக்கப்பட்ட புதிய முகங்கள் அனைவரும் தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் எனவும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கப்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago