செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28-ல் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 28-ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் இன்று (23-ம் தேதி ) ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இந்தப் பகுதிகளில் அன்றைய தினம் கட்டாயம் உள்ளூர் விடுமுறை விடப்படும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்