ரங்கசாமி ஆட்சியில் புதுவை பேரழிவை சந்தித்துவிட்டது: பியுஷ் கோயல் குற்றச்சாட்டு

By செ.ஞானபிரகாஷ்

புதுவையை விட்டு ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேறி விட்டன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது. ரங்கசாமி ஆட்சியில் புதுவை பேரழிவை சந்தித்து விட்டது என்று மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''புதுச்சேரி மாநிலத்துக்கு அதிகாரத்துடன் கூடிய மாநில அந்தஸ்தை ரங்கசாமி கோரி வருகிறார். ஆனால் அவரது ஆட்சியில் மின்சார நிலையும் சரி இல்லை. மக்களுக்கும் அதிகாரம் இல்லை. புதுவையை விட்டு ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேறி விட்டன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது. ரங்கசாமி ஆட்சியில் புதுவை பேரழிவை சந்தித்து விட்டது.

கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன், என்.ஆர். காங் கூட்டணி வைத்தது. 2014-ல் ரங்கசாமியை நம்பி நாங்களும் கூட்டு சேர்ந்தோம். எங்களுக்கு தவறான வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. மீண்டும் 2015-ல் அதிமுகவோடு கூட்டு வைத்தவர், தற்போது தனியாக தேர்தலை சந்திக்கிறார். முதல்வர் ரங்கசாமி நம்பிக்கைக்குரியவர் இல்லை. சந்தர்ப்பவாத அரசியல் புரிந்து வருகிறார். மீனவர்களை மீட்கக்கூட மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியால் புதுச்சேரியின் ஸ்திரத்தன்மை குலைந்து விட்டது. ஊழல் நிறைந்த, முறைகேடான ஆட்சியை நடத்தி உள்ளனர். இதனால் தான் புதுவை மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதை மோடி தலைமையிலான பாஜகவால் தான் மாற்றத்தை தர முடியும்.

கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் ஆட்சிகளால் புதுச்சேரி மாநிலம் வீழ்ச்சியைத் தான் சந்தித்துள்ளது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தல்களே நடத்தவில்லை. பாஜக ஆட்சி அமைந்தால் மின்சார நிலைமை சீரமைக்கப்படும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஓரே நோக்கம் ஊழல் முறைகேடு தான். புதுச்சேரி அரசுக்கு மின் உற்பத்திக்காக பிப்டிக் அரசு நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை முறைகேடான வழியில் தனியார் நிறுவனத்துக்கு புதுவை அரசு தாரை வார்த்தது. மக்களுக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்து வழங்காததால், சிலர் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர். இதனால் தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் புதிய நேர்மையான அரசு ஏற்பட்டவுடன் கோரினால் நிலக்கரி சுரங்கம் அரசுக்கு ஒதுக்கப்படும்.

தேர்தல் ஆணையம் பண நடமாட்டத்தை தடுக்க கடைசி 3 நாள்கள் மின்வெட்டு நிகழாமக் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பியுஷ் கோயல் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் தலைவர் கேசவலு, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்