மதுரை: மதுரையில் கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றது. 2 நாள் சோதனையில் ரூ.27 கோடி ரொக்கம், ரூ.3 கோடிக்கு தங்கம், வைரம், ஆபரண நகைகள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் அழகர், முருகன், ஜெயகுமார், சரவணக்குமார், செந்தில்குமார். இவர்கள் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி என்ற பெயர்களில் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவன உரிமையாளர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனை செய்தனர். இதில் கம்ப்யூட்டர்கள், ஆவணங்களின் அடிப்படையில் கணக்கில் காட்டாத தங்கம், வைர நகைகள், ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். பறிமுதல்செய்த நகைகளை மதிப்பீட்டாளர்கள் மூலம் கணக்கெடுத்தனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்த நிலையில், நேற்று காலையிலும் தொடர்ந்து சோதனை நடந்தது.
வருமான வரி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் செந்தில்வேலன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அழகர், முருகன் ஆகியோர் வீட்டில் கூடுதல் நகை, பணம் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும்ஒரே பதிவெண்களை கொண்ட 13 கார்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளான நேற்றும் இரவு வரை சோதனை நீடித்தது.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘2 நாள் சோதனையில், கணக்கில் வராத சுமார் ரூ.27 கோடி வரை ரொக்கம், ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கம்,வைரம், ஆபரண நகைகளும் கைப்பற்றியுள்ளோம். சோதனையில் சேகரித்த விவரங்களின் அடிப்படையில், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்’’ என்றனர்.
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆர்.ஆர்.புளூ மெட்டல் ஒர்க்ஸ் நிறுவனத்திலும் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதிகாரிகள் அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago