பாரதியாரின் வீரத்தை போற்றி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்: திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: மகாகவி பாரதியாரின் வீரத்தை போற்றி திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில், அந்தந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடத்தைமையப்படுத்தி வாரவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் திருவல்லிக்கேணி, வேலூர், திருப்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், நிலம்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 18-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை வாரவிழா கொண்டாடப்படுகிறது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அரிதான புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரதியாரின் வீரத்தை போற்றி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

வீடியோ காட்சி ஒளிபரப்பு

அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் நிகழ்ச்சியில், பெரம்பூர் ரயில்வே பள்ளி குழந்தைகள், பாரதியாரின் பிரபல பாடல்களான ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சின்னஞ்சிறு கிளியே’ உள்ளிட்ட பாடல்களைப் பாடினர். தொடர்ந்து, பாரதியார் இல்லம், மகாகவி பாரதியாரின் ஆவண படங்கள்தொடர்பாக வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பெரம்பூர் ரயில்வே மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ‘பாரதி கண்ட புதுமை பெண்’ என்ற தலைப்பில் உரையாற்றினர். தினமும் பல்வேறு தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்