கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழுவில் பணியாற்ற 18 அதிகாரிகள்: டிஜிபி உத்தரவு  

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் பணியாற்ற 18 அதிகாரிகளை சேர்த்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில், ஆவடி 5வது பட்டாலியன் காமண்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கிங்ஸிலின், விழுப்பும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமணிகண்டன், நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி ஆகியோர் கொண்ட குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் புலனாய்வுக் குழு, வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியவர்கள் மற்றும் போலிச் செய்திகளை பரப்பிரவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் போலிச் செய்திகளை பரப்பிய யூடியூபர்கள், ஊடக விசாரணை (media Trail) நடத்தியவர்களை கண்டறிந்து அந்த யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் பணியாற்ற 18 அதிகாரிகளை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன்படி 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் காவலர்கள் என்று மொத்தம் 18 பேரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE