சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி, மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை மின் வாரியம் தொடங்கியுள்ளது.
தமிழக மின் வாரியம் மொத்த வருவாய் தேவை மற்றும் மின்கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கை மனுவை ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆணையம் இதை பரிசீலித்து, வரவைவிட செலவு அதிகம் இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தும். வரவுஅதிகம் இருந்தால் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், அல்லது பழைய கட்டண முறையே தொடர அனுமதி வழங்கப்படும்.
கடந்த 2014 டிச.11-ம் தேதி, மின்கட்டண கோரிக்கை மனுவை மின்வாரியம் சமர்ப்பிக்காததால், ஆணையமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியது. இறுதியாக, கடந்த 2017-ம் ஆண்டு மின்கட்டண ஆணை வெளியிடப்பட்டது. அதில், மின் கட்டணம் மாற்றப்படாத நிலையில், மின் வாரியத்துக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் மட்டும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இதையடுத்து, 2022-23 முதல் 2026-27 ஆண்டு வரையிலான வருவாய் தேவை அறிக்கை மற்றும் மின் கட்டண உயர்வுக்கான மனுக்களை ஆணையத்திடம் மின் வாரியம் சமர்ப்பித்தது.
இந்த மனுக்களை விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
மின் கட்டண உயர்வு மனுக்களின் நகல்களை மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
அதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மின் வாரியம் கருத்துகளை கேட்க வேண்டும். மக்கள் தெரிவிக்கும் கருத்துகள், அதற்கு மின்வாரியம் அளிக்கும் பதில்கள் ஆகியவற்றை ஆணையத்திடம் ஆக.22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago